Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம்… “இன்னும் 4 சாட்சிகள் மட்டும் தான்”… விசாரிக்க அனுமதி தாங்க… அடுத்த வாரம் ஒத்தி வைத்த சுப்ரீம் கோர்ட்!!

ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையில் இருந்து விலக்கு கோரிய அப்போலோ வழக்கு  அடுத்த வாரம் விரிவாக விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஏற்படுத்தப்பட்டது.. இந்த ஆணையம் விசாரணையை தீவிரமாக நடத்தி கொண்டிருக்கிறது.. இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு விலக்கு கோரி அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. அதில், தங்களுக்கு இந்த வழக்கில் இருந்து விலக்கு வேண்டும் ஏனென்றால் நாங்கள் மருத்துவர்கள்தான், எங்களிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரிப்பதற்கு எதுவுமில்லை.. மருத்துவ வல்லுனர்கள் யாராவது கேட்டால் நாங்கள் சொல்ல முடியும். எனவே எங்களுக்கு விலக்கு வேண்டும் என்று  கூறப்பட்டுள்ளது..

இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருகிறது.. இரண்டு நீதிபதிகள் மாறி மாறி விசாரித்து வந்தனர்.. இன்றைய தினம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வேறு சில வழக்குகள் இருப்பதால் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறினார்கள்.. அப்போது அரசு தரப்பிலும், ஆறுமுகசாமி ஆணையத்தின் தரப்பிலும் தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் மீண்டும் ஒத்தி வைக்கக் கூடிய சூழல் தான் இருக்கிறது..

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது ஆறுமுகசாமி ஆணையம், இன்னும் 4 சாட்சிகளை மட்டும் தான் விசாரிக்க வேண்டியது என்ற தகவலையும் சொன்னார்கள்.. எனவே இந்த வழக்கை முடிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது..

இருப்பினும் இன்று விசாரிக்க முடியாது. நாங்கள் அடுத்த வாரம் வியாழக்கிழமை (23ஆம் தேதி) விசாரிக்கிறோம். அன்றைய தினம் நிச்சயமாக விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் கூறி இருக்கின்றனர்.. ஆனால் ஆறுமுகசாமி ஆணையம் சொல்லி இருக்கக் கூடிய தகவல் அப்பலோ நிர்வாகத்திடம் இருந்து மட்டும் 4 பேரிடம் விசாரிக்கப்படுமா அல்லது மொத்தமாக 4 பேரிடம் விசாரிக்கப்பட இருப்பதாக கூறியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.. அடுத்த வழக்கு விசாரணையின் போது நம்மால் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்..

Categories

Tech |