Categories
மாநில செய்திகள்

“ஜெயலலிதா மரணம்”… எனக்கு ஒன்னும் தெரியாது…. ஓ.பன்னீர்செல்வம்…..!!!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் சுமாா் 3 வருடங்களுக்கு பின் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது. முன்னதாக 154 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியுள்ள நிலையில், சசிகலா தரப்பு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தனியாா் மருத்துவமனை மருத்துவா்களிடம் மறு விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது.

அதனை தொடர்ந்து ஓ.பன்னீா்செல்வம், சசிகலா உறவினா் இளவரசி போன்றோர் மாா்ச் 21 (இன்று) நேரில் ஆஜராக ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. அந்த அடிப்படையில் விசாரணை ஆணையம் முன் சசிகலா உறவினா் இளவரசி இன்று ஆஜராகியுள்ளார். அதன்பின் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முதன் முறையாக ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆஜர் ஆகியுள்ளார்.

இந்நிலையில் அப்போலோவில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று முதன் முறையாக ஆஜரான ஓபிஎஸ் “2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி ஜெயலலிதா எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எந்தெந்த மருத்துவர்கள் என்னென்ன சிகிச்சைகள் வழங்கினார்கள் என்று எதுவும் தெரியாது” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |