Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம்…. ஓபிஎஸ் ஏன் ஆஜராகல ? விளக்கம் கொடுத்த அமைச்சர்…!!

அதிமுக – திமுக தேர்தல் அறிக்கை குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், என்னை பாத்து காப்பி அடிச்ச… உன்ன பார்த்து காப்பி அடிச்ச… காபி அடிக்கிற பசங்களுக்கு தான் காபி புத்தியே வரும். படிச்சு பாஸ் பண்ணுறவுங்களுக்கு காப்பி அடிக்கனும்னு எண்ணமே வராது. படிக்காத பசங்களுக்கு தான் வந்து காப்பி அடிக்கிற புத்தி வரும். அதே போல தான் படிக்காத திமுக…. மக்களை சந்திக்காத திமுகவுக்கு இந்த மாதிரி எண்ணங்கள் எல்லாம் வரும். நாங்கள் மக்களை சந்திச்சுட்டு இருக்கிற நிலையில நிறைய திட்டங்கள் அறிவிச்சுள்ளோம்.

பல முன்னுதாரணங்கள் தலைவர் காலத்தில்…. அம்மா காலத்தில்…. இருந்தே தீட்டி வருகின்றோம். இது எல்லாமே தேர்தல் அறிக்கையில் கண்டிப்பா வரும். வந்த பிறகு என்ன பண்றது ?  வாய் கூசாமா பொய் சொல்றது எங்களை பார்த்து காப்பி அடிச்சுட்டாங்க என்று. இதெல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மக்களே சிறந்த   நீதிபதிகள். யார் வந்தா செய்வாங்க என மக்களுக்கு தெரியும். நாங்க சொன்னதை  செய்யுறோம், சொல்லாததையும் செய்யுறோம்.

ஜெயலலிதா மரணத்தை பொறுத்தவரையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டு இருக்கிறது.அந்த கமிசனின் உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம். அந்த அடிப்படையில் நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய அடிப்படையில் ஓய்வு பெற்ற  நீதியரசர் தலைமையில் கமிசன் செயல்படுது. அதற்க்கு உச்சநீதிமன்றம் கொடுத்த தடையை விளக்கும் பட்சத்தில் கண்டிப்பாக உண்மை தெரியும். அதுக்குரிய நடவடிக்கையை அரசு எடுத்துக்கொண்டு தான் இருக்கு.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்துக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் போக மாட்டேன்னு சொல்லலையே.  அரசு பணியில் இருக்கின்றாரு, இன்று இல்லையென்றால் நாளை செல்வார். போகாம இருக்க முடியாது. கமிஷனை பொறுத்தவரை யார் சம்மந்தப்பட்டு இருந்தாலும் போயிதான் ஆகணும்.இதை திசை திருப்புற வகையில் செய்யும் எதிர்க்கட்சிகளை மக்கள் ஏற்கமாட்டார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Categories

Tech |