மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை என்பது தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பல்வேறு மர்மங்களுக்கு இதில் ஒரு வெளிச்சம் கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது. ஜெயலலிதாவுக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படாதது முதல் அவருடைய மரண தேதியில் முரண்பாடு இருப்பது வரை பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் அந்த ஆணையத்தின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் மேலும் தேவைப்பட்டால் சி விஜயபாஸ்கர், அப்போதைய துணைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன்,சசிகலா, மருத்துவர் சிவகுமார் ஆகியோரை விசாரிக்கலாம் என்று ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைந்துள்ளது. ஜெயலலிதா உடலை எம்பாமிங் செய்யும்போது உடலிலோ. முகத்திலோ காயங்கள் எதுவும் இல்லை என எம்பாமிங் செய்த மருத்துவரும், அப்போதைய எம்ஜிஆர் பல்கலை., துணைவேந்தருமான சுதா சேஷய்யன் வாக்குமூலம் அளித்துள்ளார். ஜெயலலிதா உடலில் இருந்து கால் அகற்றப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், கால் விரல் உள்பட எந்த உடல் பாகமும் அகற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.