Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம்: OPSக்கு எல்லாம் தெரியும்…. புது ட்விஸ்ட்…!!!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது இன்றைய தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை என்பது தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பல்வேறு மர்மங்களுக்கு இதில் ஒரு வெளிச்சம் கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின் ஓபிஎஸ் சிறிதும் காலம் தாழ்த்தாமல் முதல்வராக பதவியேற்றுக் கொண்டது தற்செயலானது அல்ல என ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. பதவி பறிபோன கோபத்திலும் அரசியல் ஆதாயம் அடையும் நோக்கத்திலும்தான் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் என்ன நடந்தது என்று ஓபிஎஸ் முழுமையாக அறிந்திருந்தார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |