ஜெயலலிதா மரணம் தொடர்பாக இன்று (மார்ச் 8) தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இது குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் மதன்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். அதாவது ஜெயலலிதாவுக்கு மாரடைப்புதான் ஏற்பட்டது. சிகிச்சை முறையில் மருத்துவ முறைகள் அனைத்தையும் நாங்கள் முறையாக பின்பற்றினோம் என்று மருத்துவர் மதன்குமார் பதிலளித்துள்ளார்.
இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தி உள்ளார். ஜெயலலிதா இறப்பதற்கு முந்தைய நாட்களில் அவருக்கு உயிரை காக்கும் அனைத்து சிகிச்சைகளும் முறையாக அளிக்கப்பட்டதா? என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதன்பின் ஜெயலலிதா மரணம் குறித்து 2 ஆண்டுகளுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தில் வரும் 21 ஆம் தேதி ஆஜராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சசிகலாவின் உறவினர் இளவரசியும் வரும் 21ஆம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.