இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா, தேர்தல் கூட்டணியை முடிவு செய்வதற்கு சீக்கிரம் நாம் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று என்று சொல்லி கேப்டன் அன்றைக்கு ஆணையிட்டார். அப்போதான் நான் சொன்னோன் பேச்சுவார்த்தையை சீக்கிரம் ஆரம்பிங்க… எதற்காக காலதாமதம் ? ஆல்ரெடி இந்த கூட்டணி இருக்கிறது. எனவே கால தாமதம் வேண்டாம் என்பதுதான் என்னுடைய கருத்தாக இருந்தது.
ஆனால் அன்றைக்கு எல்லோரும் அதை கிண்டல் செய்தார்கள். ஏதோ கெஞ்சுகிறோம் கேட்கிறோம் என்று. ஆனால் இன்றைக்கு என்ன ஆயிற்று ? என்றால் அதுதான் உண்மை என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கடைசி நிமிடம் வரைக்கும் எத்தனை தொகுதியில் போட்டி போடுகிறோம் ? என்ற எண்ணிக்கை இறுதி செய்யப்படவில்லை. தொகுதியும் இறுதி ஆகல. அதனால் எங்கள் வேட்பாளர் யார் ? என்பதை அறிமுகப்படுத்தி,
தொகுதிகளுக்கு சென்று வேட்புமனு தாக்கல் செய்து மக்களை சந்திக்கும் அந்த கால நேரம் வெகு வெகு குறைவாக ஆகி இருக்கிறது. இந்த ஒரு தருணம் வரக்கூடாது என்பதற்காக தான் முன்கூட்டியே நீங்கள் பேச்சுவார்த்தை ஆரம்பீங்கள் என்று நாங்கள் சொன்னோம். ஆனால் அதிலும் மீண்டும் அவர்கள் அதே தவறை செய்தார்கள். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை அழைப்பதற்கு பதிலாக மற்ற கட்சிகளை அழைத்து பேசினார்கள் .மற்ற கட்சிகளோடு பேசிக்கொண்டு இருந்தார்கள்.
அப்பொழுதுதான் நாங்கள் எங்களுடைய குழுவும் அவர்களை தொடர்பு கொண்டு சீக்கிரம் பேச்சுவார்த்தை ஆரம்பீங்க, கால தாமதம் வேண்டாம் என்று சொன்னோம். ஆனால் இன்று அண்ணன் எடப்பாடி என்ன சொல்கிறார் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு பக்குவம் இல்லை. பக்குவம் இல்லாத ஒரு அரசியலை தேசிய முற்போக்கு திராவிட கழகத் செய்கிறது என்று அவர் நேற்று அறிக்கை கொடுத்திருக்கிறார்.
இந்த பிரஸ்மீட் மூலமாக அண்ணன் எடப்பாடி யாருக்கு நான் ஒரு விளக்கத்தை சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் விரும்பும் கூட்டணி அமைப்போம் என்று சொல்லி அம்மா அவர்கள் தனது பிரசாரத்தை கேன்சல் பண்ணிவிட்டு, 41தொகுதி கொடுத்து பக்குவமாக கூட்டணி அமைத்து வெற்றி கூட்டணியாக மாற்றினார்கள். அந்த பக்குவம் அண்ணன் எடப்பாடியாரிடம் இல்லை என்பதுதான் என்னுடைய கூற்று என தமிழக முதல்வரை சாடினார்.