Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா வேதா இல்லம்….  அதிமுகவின் அடுத்த ப்ளான் என்ன….? மாஜி அமைச்சர் சொன்ன பதில்…!!!

வேதா நிலையம் தொடர்பாக அதிமுகவின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமார் தகவல் கூறியுள்ளார். ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை அரசுடமையாக்குவதாக பிறப்பித்த சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து. மேலும் மூன்று வாரங்களில் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா மற்றும் தீபக் ஆகியோரிடம் வீட்டை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் வேதா நிலையம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து நடவடிக்கை தொடர்பாக கட்சி மேலிடம் ஆலோசனை செய்து முடிவு எடுக்கும் என்று மூத்த தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனையில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.  கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. வேதா நிலையம் தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பதிலளித்த அவர் அதிமுகவில் ஒவ்வொரு தொண்டரும் திருக்கோயிலாக நினைக்கும் இடம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லம். உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மேல் நடவடிக்கை தொடர்பாக கட்சி ஆலோசனை செய்து முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |