ஜெயிலர் திரைப்படத்திற்காக ரஜினி வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் நெல்சன் தீலீப்குமார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் தலைவர் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இதனால் ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்திருக்கின்றது.
இத்திரைப்படத்திற்கு ஜெயிலர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்காக ரஜினி வாங்கயிருக்கும் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. ஜெயிலர் படத்திற்காக ரஜினி 151 ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்க இருப்பதாக சொல்லப்படுகின்றது. இதுவரை இந்திய சினிமாவில் எந்த நடிகரும் 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்காத நிலையில் தற்போது முதன்முறையாக ரஜினிகாந்த் வாங்கியிருப்பதாக பேசப்பட்டு வருகின்றது.