குற்றவாளியை கொலை செய்த கும்பலை காவல்துறையின தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது கொலை வழக்குகள் உள்ளது. இந்நிலையில் நேற்று சிறையில் இருந்து வெளியே வந்த சக்திவேல் மோட்டார் சைக்கிளில் மேலகால் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக காரில் வந்த மர்ம கும்பல் சக்திவேலை பின் தொடர்ந்து சென்று அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சக்திவேலின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கூறியதாவது. கொலை செய்யப்பட்ட சக்திவேல் கடந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஸ்டீபன் என்பவரை கொலை செய்து வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்டீபனின் உறவினர்கள் பழிக்கு பழி வாங்குவதற்காக சக்திவேலை கொலை செய்து இருக்கலாம் என்று கூறியுள்ளனர். மேலும் இது குறித்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.