Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயிலுக்கு போக ஆசை இருக்கா ? அரசு அனுப்ப ரெடியா இருக்கு – ஜெயக்குமார் அதிரடி பதில் …!!

தமிழகத்தில் சில காலங்களாக சிலைகள் அவமதிக்கப்ட்டு வருவது குறித்தான கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார். அப்போது,  எங்களுடைய நிலைப்பாட்டை பொருத்தவரை பேரறிஞர் அண்ணாவின் நிலைப்பாடுதான். ஒன்றே குலம் ஒருவனே தேவன். அதுதான் நம்முடைய பொன்மனச்செம்மல் எம் ஜி ஆரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் ஜாதி, மதம், இனம், மொழி எல்லாத்தையும் கடந்து ஒரு தேசியத் தலைவராக…  எல்லாத்துக்கு அப்பாற்பட்ட தலைவராக இருந்தாங்க.

குண்டர் சட்டம்:

சமீபகாலமாக தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்படுத்து,  அதேபோன்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலை அமைக்கப்படுது, அதே போன்று நம்முடைய பேரறிஞர் அண்ணாவின் சிலை அவமதிக்க படுகிறது என்று சொன்னால் இது கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய விஷயம். எனவே தான் இன்னைக்கு அரசைப் பொறுத்தவரை பெரியார் சிலை அவமதித்தவர்களை குண்டர் சட்டத்தில் நாம போட்டு இருக்கோம். எனவே குண்டர் சட்டம் யார் செய்தாலும் அவருக்கு சிறைதான். உள்ள  போறதுக்கும் அவுங்களுக்கு ஆசை என்றால் அதை அனுப்புவதற்கு கவர்மெண்டு ரெடியா இருக்கு.

தமிழக்தில் எடுபடாது:

எங்களுடைய இயக்கம் என்ன சொல்லுதுன்னா…. எல்லா எங்களுடைய தலைவர்கள் எல்லாருமே மத இன மொழி எல்லாத்தையும் கடந்தவர்கள். அவர்கள் எல்லாத்தையும் கடந்து தான் அரசியல் பண்ணாங்க. தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் ஒரு அரசியல் எதுனா…. பேரறிஞர் அண்ணா அரசியல், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசியல், புரட்சித்தலைவி அம்மா அரசியல் இந்த அரசியல் தான் தமிழ்நாட்டில் எடுபடும்… வேற எந்த அரசியலும் நிச்சயமாக எடுபடாது.

ஏமாந்து போவார்கள்:

அதனால என்ன பண்ணாலும் சரி, யார் என்ன பண்ணாலும்… தமிழ்நாட்டுல பிரச்சனைகளை உருவாக்கி… அதன் மூலம் அமைதியாக இருக்கின்ற மாநிலத்தில்… இங்க ஜாதியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, இனத்தின் பெயராலோ, மொழியின் பெயராலோ இங்க வந்து ஒரு பிரிவினையை ஏற்படுத்த நினைத்தால் அவர்கள் தான் ஏமாந்து போவார்கள்.. அவர்கள்தான் மண்ணைக் கவ்வுவார்கள்.. அவர்கள் வெற்றி பெறுவது போவதில்லை…. இங்க தமிழ்நாட்டை பொறுத்தவரை பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், நம்முடைய புரட்சித்தலைவி அம்மா…  இந்த ஜெனரேஷன் மட்டும் இல்ல வரக்கூடிய காலங்களில் இந்த மூன்று தலைவர்கள் தான் சொல்லும்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன்:

எங்களைப் பொறுத்தவரை நாங்கள் தெய்வ நிந்தனை செய்வதில்லை.  தெய்வ நிந்தனை கூடாது என்பதுதான் எங்களுடைய கொள்கை. அது எந்த தெய்வமாக இருந்தாலும் சரி…  இந்துவாக இருக்கட்டும், கிறிஸ்துவர்களாக இருக்கட்டும், இஸ்லாமியர்களாக இருக்கட்டும், ஜெயின மதவர்களாக இருக்கட்டும், வேற  எந்த மதமாக இருந்தாலும் சரி…  எல்லா மதத்தையும் சமமாக மதித்து…. ஒரு மத நல்லிணக்கம் என்ற அடிப்படையில்தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கொள்கை வகுத்துள்ளது. இந்த கொள்கை வைத்திருக்கும் போது நாங்கள் தெய்வம் இல்லை என்று சொல்லவில்லை…. எங்களை பொறுத்தவரை அண்ணா சொன்னது தான்…. ஒன்றே குலம் ஒருவனே தேவன்..

வேஷம் நாங்க போடல:

யாரு இல்லை கடவுள் இல்லை என்று சொல்கிறார்களோ… அவர்கள் தான் கறுப்பர் கூட்டத்துக்கு ஆதரவு. எல்லா தமிழ்நாட்டு மக்களே  பெரிய அளவுக்கு கோபத்தை வெளிப்படுத்தும் போது அவங்கதான்… இல்ல இல்ல…. எங்களுக்கு, அவர்களுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்கிறார்கள். நேற்று வரைக்கும் ஒட்டி உறவாடி…  ரெண்டு பேரும் அண்ணன், தம்பியாக ரொம்ப நெருக்கமாக இருந்து விட்டு, இப்போது  நாங்க வேறுபாடு என்று சொல்வது ஓட்டுக்காக…. அந்த மாதிரி வேஷம் நாங்க போட தேவையில்லை…. எங்களுக்கு அண்ணா வகுத்த கொள்கை. அதே கொள்கையைதான் அம்மா வகுத்த கொள்கை… தலைவர் வகுத்த கொள்கை…  நாங்கள் போய்க்கொண்டிருக்கிறோம்.

Categories

Tech |