Categories
மாநில செய்திகள்

ஜெயில்ல என்ன சோபாவும், ஏசியுமா கொடுப்பாங்க?…. அமைச்சர் ஜெயக்குமாருக்கு பதிலடி….!!!!!

சென்னை பட்டினம்பாக்கம் மீனவர் சமுதாய கூடத்தில் நடைபெற்ற 24-வது மெகா தடுப்பூசி முகாமை மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது “24வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. கொரோனா வெகுவாக குறைந்து வந்தாலும் ஓரிரு மாதம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 250 கோடி மதிப்பீட்டில் பன்நோக்கு மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட இருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் சிறையில் எனக்கு எந்த விதமான அடிப்படைவசதியும் இல்லை என்று குற்றம் சாட்டியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘தவறு செய்பவர்களுக்கு சிறையில் சோபா, ஏசியா போட்டு கொடுப்பார்கள்?.. குற்றம் செய்தவர்கள் உணர வேண்டும் என்பதற்காகத்தான் தண்டனை வழங்கி ஜெயிலில் அடைக்கப்படுகிறது. ஆகவே சந்தேகம் இருந்தால் ஜெயக்குமாருக்கு தெரிந்தவர்கள் 2 பேரை சிறைக்கு அனுப்பி சோதனை செய்து பார்க்கச் சொல்லுங்கள்” என்று பதிலடி கொடுத்தார்.

Categories

Tech |