வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்ட ஜெய்பீம் படத்திற்கு மத்திய மாநில அரசுகள் எந்தவித அங்கீகாரமும் வழங்க கூடாது என்று பாமக பாலு கடிதம் எழுதியுள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தில் காவலரின் வீட்டில் இடம்பெற்றிருந்த அக்னி சட்டி நாட்காட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த காட்சிகள் படத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும் பாமக சார்பில் தொடர்ந்து இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இதுதொடர்பாக வன்னியர் சங்க அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து, நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் பாமக வழக்கறிஞர் பாலு மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் வன்னிய சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்ட ஜெய்பீம் திரைப்படத்திற்கு மத்திய, மாநில அரசுகள் எந்த அங்கீகாரத்தையும் வழங்கக்கூடாது. எந்த விருதும் வழங்கக் கூடாது என்று எழுதியுள்ளார்.