Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஜெய்பீம்’ படத்தில் வழக்கறிஞராக நடித்தது ஏன்?… மனம் திறந்த சூர்யா…!!!

ஜெய்பீம் படத்தில் வழக்கறிஞராக நடித்தது குறித்து சூர்யா விளக்கமளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது டி.ஜே.ஞானவேல் இயக்கியுள்ள ஜெய்பீம் படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், லிஜோமொல் ஜோஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் வருகிற நவம்பர் 2-ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் வழக்கறிஞராக நடித்தது குறித்து சூர்யா விளக்கமளித்துள்ளார். அதில் ‘ஜெய்பீம் படத்தில் வழக்கறிஞராக நடிப்பதற்கு முன் நான் நீதியரசர் சந்துரு ஐயாவை சந்தித்து பேசினேன். அவரை பற்றி இதற்குமுன் நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் வழக்கறிஞராக பணிபுரிந்த போது மனித உரிமை தொடர்பான வழக்குகளில் சம்பளம் வாங்கியது இல்லை. இதுபோன்ற பல விஷயங்களை தெரிந்து கொண்டபின் அவரை சந்தித்தேன்.

Suriya and Jyotika ink deal with Amazon; will release four films in the  next four months - The Hindu

அவர் இளமை காலத்தில் எப்படி இருந்தார் என்பதை பற்றி தெரிந்துகொண்டேன். நீதித்துறையில் இவர் செய்த விசயங்களை நாங்கள் உலகிற்கு கொண்டு சேர்க்க விரும்பினோம். நீதிபதி சந்துரு போன்ற ஒருவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. அவருக்கு உரிய மரியாதையையும் செய்யவில்லை. அதனால் தான் அவரின் கதையை கூறி இளம் மனதில் அக்கினிப் பிரவேசம் செய்ய நினைத்தோம். இதன் சாட்சியாக ஜெய்பீம் படம் உருவானது. மேலும் இந்த படத்திற்காக உயர் நீதிமன்றம் போன்ற மிகப்பெரிய செட் அமைத்தோம். இதுவரை தமிழ் திரையுலகில் யாரும் செய்யாத ஒன்று இது. இவை அனைத்தையும் ஒன்றிணைக்கவே ஜெய்பீம் படத்தில் முதல்முறையாக வழக்கறிஞர் வேடத்தில் நான் நடித்தேன்’ என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |