Categories
சினிமா

ஜெய்பீம் படத்துக்காக…. உண்மையாவே இத செஞ்ச படக்குழு…. வெளிவந்த சூப்பர் தகவல்….!!!

 

ஜெய் பீம் படக்குழுவினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது.

அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் அனைத்து தரப்பு மக்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டது. ஜெய் பீம்’ படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மேலும் ஜெய் பீம் படத்தில் நடித்த படக்குழுவினருக்கும் இதன் மையமாக விளங்கிய ராஜாகண்ணுவின் குடும்பத்தினருக்கு உதவிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் அக்கட்சி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இதில் கலந்து கொண்டு பேசிய ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் கம்யூனிசத்தை படமாக்க வேண்டும் என்பது தன்னுடைய நோக்கம் அல்ல எனவும் பாதிக்கப்பட்ட மக்களை பற்றி பேசும் போது கம்யூனிசம் உள்ளே வந்து விட்டது எனவும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் 30 ஆண்டுக்கு பிறகு இப்படத்தின் மூலம் உண்மையை போஸ்ட் மார்டம் செய்துள்ளோம் எனவும் படத்தில் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் படங்களை காட்டியிருந்தேன். கருப்பு, நீலம், சிவப்பு இணைந்தால் தான் இந்தியாவை ஜனநாயகமாக்க முடியுமெனவும் கூறப்படும் ஒரு கருத்து .என அவர் பேசினார்.

Categories

Tech |