Categories
மாநில செய்திகள்

ஜெய்பீம் மாதிரி அதிகாரம் மோசமானதல்ல…. கரூர் ஆட்சியர் ட்விட்டர் பதிவு….!!!!

ஞானவேல் இயக்கத்தில் அமேசான் பிரைமில் சூர்யா நடித்த ஜெய் பீம் திரைப்படம் வெளியானது. அந்தப்படத்தில் பூர்வகுடி மக்கள் மீது அதிகாரம் எந்த அளவிற்கு மோசமாக நடக்கிறது என்றும், அதற்கு நீதி கிடைக்க சட்டம் எந்த அளவிற்கு உதவி செய்கிறது என்றும், அந்தப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை ஏராளமானோர் பாராட்டி வருகின்ற நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் டி. குணாலன் முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில் இருவரும் இந்திய ஆட்சிப் பணியில் அதிகாரத்துவத்தின் ஜெய்பீம் முழக்கம் சூர்யா நடிப்பில் ஜெய் பீம் திரைப்படம் நம் சமூகமும், அதிகாரத்துவமும், இந்த மண்ணின் பூர்வக்குடி மக்களுக்கு இழைக்கும் அநீதி குறித்து அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

அதை கண்டிப்பாக மறுக்க இயலாது. அதிகாரத்துவம் முற்றிலும் மோசமானது அல்ல இந்நிலையை மாற்ற தொடர்ந்து முயன்று வருகிறது என்பதை பதிவு செய்வது அவசியமாகிறது. அதற்கான எனது அனுபவங்களை பகிர விழைகிறேன். இது கண்டிப்பாக தற்பெருமை பறைசாற்றும் பதிவு அல்ல. இது அதிகாரத்துவத்தின் ஜெய்பீம் விளக்கமாகும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக தமிழ்நாட்டில் நான் முதன் முதலில் சார் ஆட்சியராக திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் கோட்டத்தில் 1.5 ஆண்டுகளும், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோட்டத்தில் 5 மாதங்களும் பணியாற்றினேன். இவ்விரு பகுதிகளிலும் இருளர் இன மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் இருக்கு ஏற்படுத்தியுள்ள சமூக நீதியை நிலைநாட்ட எஸ்டி சமூகத் சான்று அவசியமானதாகும். அதை வழங்கும் அதிகாரியாக நாங்கள் ஒவ்வொரு இருப்பிடமாக சென்று செய்யாறில் 3,000 பேருக்கும் திண்டிவனத்தில் 2,300 பேருக்கும் வருவாய்த் துறையால் ST சான்று வழங்கப்பட்டது. இருளர் அதிக அளவில் கொத்தடிமைகளாக செங்கல் சூளைகளிலும், மரம் வெட்டுவதற்கும், ஈடுபடுத்தப்படுகின்றனர். எனது பணிக்காலத்தில் 25 நபர்களை விடுவித்துள்ளேன். எனினும் போதிய அடிப்படை வசதிகளும், அரசு நலத்திட்ட உதவிகளும் சரிவர கிடைக்காததால் மீண்டும் அதே தொழிலில் இருக்கும் நிலை ஏற்படுகிறது.

இதற்கு தீர்வு காணும் நோக்கில் வந்தவாசி அருகிலுள்ள நல்லூர் கிராமத்தில் அப்துல்கலாம் என்று இருளர்களுக்கான ஸ்மார்ட் காலனி, பசுமை வீடுகள், சாலைகள், மழைநீர் வடிகால் குடிநீர், சமுதாயக்கூடம், குழந்தைகள் மையம் சிறுவர் பூங்கா, பால்பண்ணை, செங்கல்சூளை ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கினோம். நான் பணியில் சேர்ந்த 23.12 ..2015 அன்று இத்திட்டத்திற்கு அடித்தளம் இடப்பட்டது. அப்பொழுது தமிழ்நாடு முழுவதும் பெருமளவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது அன்று நான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த ஒரு நிவாரண மையத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்தேன். இருளர் மக்கள் கேட்டுக் கொண்டதால் அவர்களின் குடிசைகளை நேரில் சென்று பார்வையிட்டேன்.

ஏரிக்கரையில் உள்ளதால் அவர்களின் குடிசைகள் நீரில் முழுவதுமாக மூழ்கி இருந்தனஹ அவர்கள் தங்களுக்கு வேறு இடத்தில் வீட்டுமனை மட்டும் வழங்க கோரினர். அவர்களின் நிலைமை என்னை மிகவும் உலுக்கியது. இருப்பினும் ஐஏஎஸ் அதிகாரியாக நான் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளே ஒன்றிணைத்து குழு அமைத்தேன். அவர்களின் பணிச்சுமை அதிகரிக்காத வகையில் அவர்களின் தினசரி பணியுடன் இந்தத் திட்டம் இணைக்கப்பட்டது. மீசநல்லூர் கிராமத்திலுள்ள 10 ஏக்கர் பரப்பளவில் ஒரு கல்லாங்குத்து புறம்போக்கு நிலம் தீர்வு ஏற்படாத தரிசு நிலமாக வகை மாற்றம் செய்யப்பட்டு முதல் கட்டமாக 43 இருளர் குடும்பங்களுக்கு தலா 2.5 சென்ட் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

திட்டத்திற்கான நிதியை பெற நானே பல முயற்சிகளை மேற்கொண்டேன். ஒன்றிய அரசின் பழங்குடி நலத்துறையில் PVTG திட்டத்தில் 1.50 9 கோடி ரூபாய் நிதி கோரி நேரடியாக விண்ணப்பித்தேன். திட்டம் குறித்து துறையில் இணைப் செயலருடன் நேரில் விபரித்து திட்ட அனுமதி குழுவில் அனுமதியை 2 மாதங்களில் பெற்றேன். நகர்ப்புறங்களில் உள்ள Gated communities போன்றே இந்த இருளர் ஸ்மார்ட் காலனி QUN Design என்ற நிறுவனத்தால் இலவசமாக வடிவமைக்கப்பட்டது. 2.5 லட்சம் ரூபாய் செலவில் சூரிய சக்தி பொருந்திய தனி வீடுகள் கட்டப்பட்டன. மேலும் SPM திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பறைகள் கட்டப்பட்டன. இருளர் நலன் குறித்து நான் கருத்தரங்குகள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் வலியுறுத்தினேன்.

அதன் விளைவாக கொத்தடிமை, தொழிலாளர் மறுவாழ்வுக்காக மாநில செயல்திட்டத்தில் மீசலூர் திட்டம் முன்மாதிரியாக சேர்க்கப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு அதிகாரிகள் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் பாடுபட்டு வருகிறார்கள். அவை தாமத மானதாகவும், அளவில் சிறியவையாகவும் தோன்றலாம். ஆனால் கண்டிப்பாக நேர்மையானவையாகும். இந்த நீண்ட நெடிய பயணத்தின் முடிவில் நிச்சயம் ஒளி பிறக்கும். இருளர் வாழ்வில் உள்ள இருள் நீங்கும். அரசியலமைப்புச் சட்டத்தை காப்பதே ஐஏஎஸ் அதிகாரிகளின் கடமையாகும். இது எங்களின் “ஜெய்பீம்” முழக்கம் என குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவுகள் வலைதளங்களில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |