Categories
மாநில செய்திகள்

‘ஜெய்பீம்’ வெற்றி… எங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி… சூர்யாவிற்கு கடிதம் எழுதிய கே பாலகிருஷ்ணன்…!!!

ஜெய்பீம் திரைப்படத்தை பாராட்டி மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் நடிகர் சூர்யாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படத்தில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜகண்ணுவை பொய் வழக்கில் கைது செய்யும் காவல்துறை அவரை அடித்தே கொலை செய்துவிட்டு அதனை மறைக்கிறது. இந்த உண்மையை வெளிக்கொண்டுவர வழக்கறிஞர் சந்துரு மேற்கொள்ளும் முயற்சி ஜெய் பீம். இந்தப் படத்தில் திரைக்கலைஞரான சூர்யா முக்கிய பிரச்சினைகளில் சமூக அக்கறையோடு மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருவதை பாராட்டுகிறேன்.

ஜெய்பீம் படத்தின் வெற்றி மார்க்சிஸ்ட் இயக்கம் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த, மேலும் ஒரு வெற்றியாக கருதி பெருமை அடைகிறேன்” என்று அதில் தெரிவித்திருந்தார். மேலும் இவ்வழக்கில் நெஞ்சுறுதியோடு போராடிய ராஜகண்ணுவின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் ஒரு ஏழை தொழிலாகவே இன்னும் சென்னையில் வாழ்ந்து வருகிறார்கள். பார்வதிக்கும் அவர் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உதவிக்கரம் நீட்டி ஆதரவளிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார்.

Categories

Tech |