இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.
இதனால் தற்போது பல மாநிலங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விலங்கியல் பூங்காவில் உள்ள சிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.