தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். ரசிகர்களால் தல என்று அழைக்கப்படும் இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும். தற்போது அஜித் நடித்து வினோத் இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் வலிமை.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. அதோடு படத்தின் கிலிம்ப்ஸ் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. இந்நிலையில் தல அஜித் தனது ரசிகர்களுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ThalaAJITH Recent pics At Jaipur 📸❤️#AjithKumar #Valimai pic.twitter.com/kuPHdfksAF
— AJITH FANS COMMUNITY (@TFC_mass) October 12, 2021