Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெய்யின் ‘எண்ணித் துணிக’ டீசர் செய்த மாஸ் சாதனை… உற்சாகத்தில் படக்குழு…!!!

‘எண்ணித் துணிக’ படத்தின் டீசர் யூடியூபில் ஒரே வாரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஜெய் தற்போது எண்ணித் துணிக, சிவசிவா, குற்றமே குற்றம், பிரேக்கிங் நியூஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் எண்ணித் துணிக படத்தை புதுமுக இயக்குனர் எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்கியுள்ளார் . இந்த படத்தில் அதுல்யா கதாநாயகியாக நடித்துள்ளார். ரெயின் ஆப் ஏரோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார் . மேலும் ஜேபி தினேஷ் குமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

எண்ணித்துணிக

சமீபத்தில் இந்த படத்தின் டீசரை பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதிரடியான இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் எண்ணித்துணிக படத்தின் டீசர் யூடியூபில் ஒரே வாரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து அசத்தல் சாதனை படைத்துள்ளது. இந்த டீசருக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Categories

Tech |