ஜெய் சுல்தான் பாடல் யூடியூபில் 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் சுல்தான். இந்த படத்தில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் லால், நெப்போலியன், யோகி பாபு, ராமச்சந்திர ராஜு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
Thank you all for 25M ❤️❤️❤️❤️#JaiSulthan – https://t.co/lWoBWNnHsw pic.twitter.com/opVxhkFdhW
— DreamWarriorPictures (@DreamWarriorpic) May 18, 2021
இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கிய இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. சமீபத்தில் இந்த படம் ஓடிடியில் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது . இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஜெய் சுல்தான் பாடல் யூடியூபில் 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அசத்தல் சாதனை படைத்துள்ளது. இதனை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.