இயக்குனர் ஞானவேல் ஜெய் பீம் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் உண்மை சம்பவத்தை படமாக்க இருக்கின்றாராம்
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகனாக வலம் வருகின்றார் சூர்யா. தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா என்டர்டெயின்மென்ட் நிறுவன தயாரிப்பில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இத்திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தை பார்த்த பலரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்தார்கள்.
இந்த நிலையில் ஞானவேல் ஜெய் பீம் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் உண்மை சம்பவத்தை கொண்டு “தோசா கிங்” என்ற திரைப்படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்திரைப்படம் பாலிவுட்டில் உருவாக இருக்கின்றது. இது குறித்த அறிவிப்பு தற்பொழுது தான் வெளியானது. இந்தநிலையில் அதற்குள் வழக்கறிஞரிடமிருந்து எச்சரிக்கை ஒன்று வெளியானதாக செய்தி கசிந்து இருக்கின்றது. சரவணபவன் நிறுவன ராஜகோபால் குறித்து ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுடன் அவதூறு பறக்கும் வகையில் இத்திரைப்படம் எடுத்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவ்வரிப்பில் கூறப்பட்டுள்ளது.