செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கடந்த ஒரு வார காலமாக சென்னை மாநகரத்தில் பாதிப்படைந்த பகுதிகள் எல்லாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நானும், முன்னாள் முதலமைச்சர் கழகத்தினுடைய இணை ஒருங்கிணைப்பாளர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் அனைத்து பகுதியிலும்,
பார்த்து ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நிர்வாகிகள், தொண்டர்களில் இருந்து மாவட்ட கழக செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் வரை பல்வேறு நலத்திட்ட உதவிகளை மனிதாபிமான முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இன்றைக்கு மிகப்பெரிய நிகழ்வாக சென்னை மாநகரம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது.
ஜெய் பீம் என்ற ஒரு படம் வெளியாகியுள்ளது, அதில் வந்த கதாபாத்திரத்திம் சர்ச்சையாகி இருக்கிறது இது குறித்து கருத்து கேட்டபோது, நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கிறது, மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் கூறுவதற்காக வந்திருக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான் நாங்கள் நிவாரணப் பொருள் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதில் எந்தவித பாகுபாடும் கிடையாது, உங்களுடைய பார்வை தான் வேறு மாதிரி இருக்கிறது..