ஹாங்காங் அணியின் அன்பிற்கு இன்ஸ்டாகிராமில் விராட் கோலி நன்றி தெரிவித்துள்ளார்.
ஆசியக்கோப்பை தொடரில் நேற்று இரவு இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகள் துபாய் சர்வதேச மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச முடிவு செய்ததை தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 192 ரன்கள் குவித்தது. இதில் சூர்யகுமார் யாதவ் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை பிரமிக்க வைத்தார்.. சூர்யகுமார் 26 பந்துகளில் 68 ரன்கள் (6 பவுண்டரி, 6 சிக்ஸர்கள்) அடித்தார்.
அதேபோல இவருக்கு உறுதுணையாக விராட் கோலியும் சிறப்பாக ஆடினார். சமீப காலமாக பார்ம் இல்லாமல் தவித்த கிங் கோலி இந்த ஆட்டத்தில் அற்புதமாக ஆடினார். கோலி 44 பந்துகளில் 59 ரன்கள் (3 சிக்ஸர், 1 பவுண்டரி) எடுத்தார். பின்னர் ஆடிய ஹாங்காங் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி சூப்பர்-4ஐ எட்டியிருக்கிறது.
இந்நிலையில் போட்டி முடிந்த பின் தங்களது நாட்டு ஜெர்சியை ஹாங்காங் கிரிக்கெட் அணி விராட் கோலியிடம் பரிசாக வழங்கியது.. அதனை விராட் கோலி பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், அற்புதமான நாட்கள் காத்திருக்கிறது. ஒரு தலைமுறையையே ஊக்கப்படுத்தியதற்கு நன்றி நாங்கள் உங்களுடன் எப்போதும் நிற்கிறோம்.. அன்புடன் வலிமையுடன் ஹாங்காங் கிரிக்கெட் அணி என்று தெரிவித்துள்ளார். விராட் கோலியின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.
Hong Kong cricket gifted their jersey to Virat Kohli with a special message. pic.twitter.com/Nl63mvffgd
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 31, 2022