Categories
உலக செய்திகள்

ஜெர்மனியில் கொரோனா தொற்று அதிகரிப்பு… ஊரடங்கு தளவிற்கு… சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!

ஜெர்மனிய நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுவதால் ஊரடங்கு தளவிற்கு சுகாதாரத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரித்தானிய நாட்டில் முதல் முதலில்  கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா தொற்றானது வேகமாக பரவி வருவதால் ,அந்நாட்டின்  தொற்றின் எண்ணிக்கை  அதிகரித்து காணப்படுகிறது. இதனால் ஜெர்மனி சுகாதாரத்துறை நிபுணர்கள் ஊரடங்கு தளவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில்  social democrats சுகாதாரத் துறை நிபுணரான karl lauterbac கூறியிருப்பது, நாட்டில் தொற்றின்  எண்ணிக்கை குறைவாக இருந்தால் மட்டுமே ஊரடங்கு தளர்வுகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதனால் ஜெர்மனி சில ஊரடங்கு தளர்வுகளை நீக்கியதால், கடந்த சில வாரங்களில் தொற்றின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தடுப்பூசிகள் குறைந்த அளவே விநியோகிக்கப்படுவதால் அந்நாட்டின் ஆட்சிபுரியும் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு  மக்களின் ஆதரவும் குறைந்து கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாது இக்கட்சியின் உறுப்பினர்கள் கொரோனா நோய் தொற்றில் முகக் கவசங்கள் விற்பனை செய்தலில் ஏற்பட்ட ஊழல் போன்ற காரணங்களால் இந்தக் கட்சி மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊரடங்கு தளர்வுகளை கட்டுப்பாடுடன் இருக்கும்படி அமைக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

Categories

Tech |