Categories
உலக செய்திகள்

ஜெர்மனியில் சிரிய அகதியை தாக்கிய நபர்… துரிங்கியா ஆளுநர் கடும் கண்டனம்… வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ..!!

ஜெர்மனியில் ட்ராமில் பயணம் செய்துகொண்டிருந்த சிரிய அகதி இளைஞரை தாக்கிய ஜெர்மனியை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜெர்மனி நகரத்திலுள்ள Erfurt பகுதியில் ட்ராம் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த 39 வயதான ஜெர்மனியை சேர்ந்த நபர் ஒருவர் சிரிய அகதியான 17 வயதான இளைஞரிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து இவர்கள் இருவரின் வாக்குவாதம் முற்றிபோய் ஆத்திரமடைந்த ஜெர்மனியை சேர்ந்த நபர் திடீரென அந்த இளைஞரை தாக்க தொடங்கியுள்ளார்.

அப்போது அந்த ஜெர்மனியர் இளைஞரின் முகத்தில் மிதித்ததோடு மட்டுமல்லாமல் தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். இதனை பார்த்த ட்ராமில் இருந்த மற்ற பயணிகள் உடனடியாக காவல்துறையினரிடம் புகார் அளித்ததோடு, அவர்களின் சண்டையை செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார் பிரச்சனையில் ஈடுப்பட்ட ஜெர்மனியை சேர்ந்த நபரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை துரிங்கியா (Thuringia) மாகாண ஆளுநர் Bodo Ramelow வன்மையாக கண்டித்துள்ளார்.

Categories

Tech |