ஜெர்மனியில் உள்ள RCI திருச்சபையில் மதகுருக்கள் 300-க்கும் மேற்பட்ட பெண்களை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் உள்ள கத்தோலிக்க மறைமாவட்டமான கோலோக்னே நகரிலுள்ள RCI திருச்சபையில் மதகுருக்கள் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த உண்மைகள் எல்லாம் ரோமன் கத்தோலிக்க திருச்சபையால் நியமிக்கப்பட்ட ஒரு சுயாதீன ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.அந்த அறிக்கையில் கடந்த 1975ஆம் ஆண்டில் இருந்து 2018 வரை 202 குற்றவாளிகள் 316 பேரை பாலியல பலாத்காரம் செய்துள்ளனர் .
இந்த அறிக்கையில் வெளியான தகவலில் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் என்று தெரிவித்துள்ளனர்.இந்த அறிக்கை உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.