Categories
உலக செய்திகள்

ஜெர்மனியில் புத்தாண்டுக்கு பின் கொரோனா நிலவரம் என்ன….? அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட்…

புத்தாண்டு பிறந்த பிறகு ஜெர்மனியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெர்மனியில் புத்தாண்டு தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நேற்று நேற்று வரை கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. திங்கட்கிழமை நிலவரப்படி ஜெர்மனியில் 10,000 பேரில் 232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மனியில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. டிசம்பர் 27 அன்று 13,908 ஆக இருந்தது. அது, திங்கட்கிழமை, 3.1.2022 அன்று, 18,518 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேலும் புத்தாண்டு விடுமுறை கொண்டாட்டத்தின்போது அதிகம் பேருக்கு பரிசோதனை செய்து இருக்கமாட்டார்கள் என்பதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்னும் அதிகமாகத்தான் இருக்கும் என நிபுணர்கள் குழு கூறுகிறது. இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சரான Karl Lauterbach கூறுகையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளோரின் உண்மையான எண்ணிக்கை தற்போது அறியப்பட்டுள்ள எண்ணிக்கையை விட மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகம் இருக்கலாம் என கூறியுள்ளார்.

Categories

Tech |