Categories
உலக செய்திகள்

கனடாவுக்காக கோரிக்கை விடுத்த…. ஜெர்மன் தூதரை…. அவமதித்த சீனா….!!

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் கோரிக்கை விடுத்த ஜெர்மன் தூதரை சீனா அவமதித்துள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் ஜெர்மன் தூதர் Chiristoph heusgen. இவர் கடந்த 40 வருடங்களாக தூதராக பணியாற்றி வருகிறார். மேலும் 2017 ஆம் வருடத்திலிருந்து ஜெர்மன் தூதராக உள்ளார். இந்நிலையில் heusgen ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றியுள்ளார். அப்போது கனடாவைச் சேர்ந்த இரண்டு பேரை சீனா பிடித்து வைத்துள்ளதால் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி அவர்களை வெளிவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இவரின் கோரிக்கைக்கு சிறிதும் நாகரீகம் இன்றி பதிலளித்துள்ளது சீனா.

அதாவது சீனாவின் துணை தூதர் Geng shuang கூறுகையில் ஒருவழியாக தொல்லை ஓய்ந்தது,  ஹேர்ஸ்கெல் பணிக்கான சூழலை கெடுத்து கொண்டிருந்தார். மேலும் 2021 ஆம் வருடம் அவர் இல்லாமல் பணிகளை நல்ல முறையில் செய்யமுடியும் என்றும் கூறியுள்ளார். மேலும் இவர் பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றுவதை பயன்படுத்தி மற்ற நாடுகளை கொடுமைப்படுத்துகிறார் என்றும் கூறியுள்ளார். 40 வருடங்களாக பணியாற்றி வந்த heusgen இந்த வருடத்துடன் ஓய்வு பெற உள்ளார். இதனை குறிப்பிட்டு தான் shuang அவ்வாறு பேசியுள்ளார்.

Categories

Tech |