Categories
உலக செய்திகள்

ஜெர்மன் ஜனாதிபதி உக்ரைனுக்கு வரணும்…. அழைப்பு விடுத்த கீவ் மேயரின் சகோதரர்….!!!!!

ஜெர்மன் ஜனாதிபதி உக்ரைனுக்கு வருகை தரவேண்டும் என்று கீவ் மேயரின் சகோதரர் Vladmir Klitschko அழைப்பு விடுத்துள்ளார். போலந்து ஜனாதிபதியுடன் ஜெர்மன் ஜனாதிபதி Frank-Walter Steinmeier உக்ரைனின் கீவ் நகருக்கு பயணம் மேற்கொள்ள இருந்தார். ஆனால் அவர் கடந்த காலங்களில் ரஷ்யாவுடன் தொடர்பிலிருந்த காரணத்தால் Frank-Walter Steinmeier வருகையை உக்ரைனியர்கள் விரும்பவில்லை.

இதன் காரணமாக ஜெர்மன்ஜனாதிபதி Frank-Walter Steinmeier உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் ஜெர்மன் ஜனாதிபதி Frank-Walter Steinmeier-ஐ உக்ரைனுக்கு வரவேற்பதாக கீவ் நகர மேயரின் சகோதரர் Vladmir Klitschko பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். சென்ற காலங்களில் ரஷ்ய தொடர்பான கொள்கைகளில் ஜெர்மன் ஜனாதிபதி தவறுகள் செய்தது உண்மை தான். அப்போது அது பெரியளவில் உக்ரைனுக்கு தீங்கு விளைவித்தது.

அவற்றிற்காக மனிப்பு கோரிய ஜெர்மன் ஜனாதிபதி தன் தவறுகளை ஒப்புக்கொண்டார். உக்ரைன் ஜெர்மனியுடன் தொடர்ந்து உறவை வளர்க்க வேண்டிய அவசரம் உள்ளதாக நான் நினைக்கிறேன். நான் பெர்லினுக்கு சென்றிருந்தபோது பல்வேறு முக்கிய ஜெர்மன் அரசியல்வாதிகளுடன் என்னால் பேச முடிந்தது. நேருக்கு நேர் சந்திப்புகள் எப்போதும் நன்மை பயக்கும் என்பது தெளிவானது என Vladmir Klitschko தெரிவித்து இருக்கிறார்.

Categories

Tech |