தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறது. மற்ற மாநிலங்கள் புருவங்களை உயர்த்தும் வகையில் அமைந்த ஒரு சில முக்கிய தீர்மானங்கள் குறித்த சிறிய தொகுப்பை பார்க்கலாம்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதையே தமிழக அரசு தனது நிலைப்பாட்டாக கொண்டுள்ளது. அவர்களின் விடுதலைக்காக மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதா தீவிர முயற்சி மேற்கொண்டார், என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதற்கும் ஒரு படி மேலே சென்று ஏழு பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றினார். தீர்மானத்தை நிறைவேற்றியது மட்டுமல்லாமல் அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்து அவரை ஒப்புதலை பெற முதலமைச்சர் தலைமையிலான தமிழக அரசு இடைவிடாத முயற்சி செய்து வருகிறது.
தமிழக – கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் விவகாரத்தில் முடிவு எட்டும் விதமாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் 15ம் தேதி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது.அந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி காவிரி மேலாண்மை வாரியத் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதன்படியும் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரிலும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்தது. இதன் மூலம் 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே அணையில் இருந்த காவிரி பிரச்சனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீர்வு கண்டுள்ளார் என நீர் மேலாண்மை வல்லுநர்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர்.
2018 ஆம் ஆண்டில் கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தீவிர நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிறப்புக் கூட்டத்தில் கர்நாடகாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் முன்மொழியப்பட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டவாறு கீழ்படுகை மாநிலங்களில் முன்அனுமதி பெறாமல் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த கூடாது என்பதையும், மீறி கர்நாடக அரசு செயல்பட முயன்றதற்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
தமிழக அரசு மத்திய அரசு உத்தேசித்த அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து. 2018ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. மாநிலங்களை கலந்தாலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னரே மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் எனவும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதேபோன்று காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல் படுத்தாமல் தடுக்க வேண்டும் என்று விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கும் நோக்கில் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்படுத்துதல் சட்ட மசோதாவை நிறைவேற்றினார். இதன் மூலமாக தமிழகத்தின் நெற்களஞ்சிய பகுதிகள் சந்திக்க இருந்த பேரழிவை தடுத்துள்ள ஏழை எளிய மக்களின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சாதனை முதலமைச்சர்களின் பட்டியலில் என்றென்றும் நிலைத்து இருப்பார்.