Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ., இருக்கையில் அமர ஆசைபட்ட சசி…. கோடி கோடியாக சம்பாதித்த அதிமுக தலைவர்கள்…. ஜெ. தீபா…..!!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் நடத்திய விசாரணையில் சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ஜெய.ராதா கிருஷ்ணன், டாக்டர் சிவகுமார் ஆகியோர் மீது சரமாரியாக குற்றம் சாட்டியது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ தீபா அளித்த பேட்டியில், எம்ஜிஆர் மரணமடைந்த காலகட்டத்தில் இவ்வளவு தொழில்நுட்ப வசதிகள் கிடையாது. இருப்பினும் அவருக்கு என்னென்ன சசிகிச்சைகள் அளிக்கப்பட்டது? என்ன நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என அனைத்து விஷயங்களையும் மக்களுக்கு வெளிப்படையாக கூறினார்கள். வெளிநாட்டிற்கு அழைத்து சென்றும் சிகிச்சை அளித்தனர்.

இதுபோன்று சசிகலாவும் அவரால் கோடி கோடியாக சம்பாதித்த அதிமுக தலைவர்களும் ஏன் ஜெயலலிதாவை காப்பாற்ற முன்வரவில்லை. ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பது ஏன் அவர்கள் மூடி மறைக்க வேண்டும் அதன் அவசியம் என்ன.? என் அத்தை இறந்ததற்கு அவரை சுற்றி இருந்தவர்களே காரணமாக இருந்துள்ளார்கள். ஜெயலலிதாவிடம் அளித்த உறுதி மொழியை மீறி அவருடைய இருக்கையில் அமருவதற்கு சசிகலா ஆசைப்பட்டார். அதன் காரணமாகவே ஜெயலலிதாவிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பது என்னுடைய குற்றசாட்டாகும். தவறு செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை வழங்க வேண்டும்.

Categories

Tech |