சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு தடை கோரிய டிராபிக் ராமசாமி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமான நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் திறந்து வைத்தார். இதனையடுத்து அங்கு பொதுமக்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு தடை விதிக்க டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை விதிகளை மீறி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையில், நினைவிடம் கட்ட தடை கோரி முன்னர் தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அரசு தரப்பில் முன்வைத்தனர். இதனால் ராமசாமி தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது