மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை பெட்ரோல் குண்டு வீசி தகர்ப்பேன் என்ற இளைஞர் ஒருவர் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார்.
அதன் பிறகு நேற்று முன்தினம் தமிழகம் திரும்பினார். அவரின் வருகையை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். அது மட்டுமன்றி சில பரபரப்பு சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை பெட்ரோல் குண்டு வீசி தகர்க்கத் போவதாக இளைஞர் ஒருவர் மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டிஜிபி அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த கொருக்குப்பேட்டை சேர்ந்த இளைஞர், அரசு வேலை வழங்காவிட்டால் ஜெயலலிதா நினைவிடத்தை பெட்ரோல் குண்டு வீசி தகர்ப்பேன் என்று நேரடியாக எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.