Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஜெ.பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அரசு விளைவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களுடைய திருவுருவச்சிலை அரசு சார்பாக முதல் முறையாக உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் முன்னிலையில் இந்த முழு உருவச் சிலையை திறந்து வைத்தார். முழு உருவச்சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரையாற்றிய போது,

மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவருடைய புகழுக்கு மேலும் மகுடம் சூட்டும் வகையில் அவருடைய பிறந்தநாளான பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவிப்பினை தற்போது அறிவித்திருக்கிறார். மேலும் உயர்கல்வி மன்ற வளாகத்தில் அருகே அமைக்கப்பட்ருக்க கூடிய முழு உருவச் சிலைக்கு ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பாக இங்கு மரியாதை செலுத்தப்படும் என்ற ஒரு அறிவிப்பை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார்.

Categories

Tech |