புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளில் இதை உறுதி எடுப்போம் என டிடிவி தினகரன் சூளுரைத்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் பிப்ரவரி 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்நாளில் ஏழை எளிய மக்களுக்கு நலத் திட்டங்களை வழங்கி கொண்டாடி மகிழ்ந்திடுவோம், திமுகவை தலையெடுக்க விடாமல் செய்து தமிழகத்திற்கு புதிய விடியலை ஏற்படுத்திய உறுதி ஏற்றிடுவோம் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சூளுரைத்துள்ளார்.