தமிழில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகியுள்ள தலைவி படத்தின் புதிய ஸ்டில்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
தமிழில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தலைவி’. இன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி, இப்படத்தில் புதிய ஸ்டில்களை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு புகைப்படத்தில் கங்கனா ரணாவத் (ஜெயலலிதா) கோட்டைக்கு செல்வது போன்றும், மற்றொரு புகைப்படத்தில் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதற்கும் மேலாக மற்றொரு புகைப்படத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தின் புதிய ஸ்டில்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.