Categories
மாநில செய்திகள்

ஜெ.வின் பிறந்தநாளை முன்னிட்டு… அருங்காட்சியகம் திறப்பு..!!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரது அருங்காட்சியம் திறக்கப்பட்டது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். அவரின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு  கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அருங்காட்சி மற்றும் அறிவுசார் பூங்கா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு அருங்காட்சியம் திறக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். முன்னதாக ஜனவரி 27 ஆம் தேதி அன்று ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்பட்டது. பராமரிப்பு பணிகள் காரணமாக மூடப்பட்டது . இந்நிலையில் அங்கு அமைக்கப்பட்டு வரும் அருங்காட்சியகத்தை இன்று முதல்வர் திறந்து வைத்துள்ளார்.

Categories

Tech |