Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ.வீட்டின் சாவியை கேட்டு தீபக் வழக்கு …!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீட்டின் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று தீபக் வழக்கு தொடர்ந்து இருக்கின்றார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு  முடிவெடுத்தது. இது தொடர்பாக மக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், அண்ணன் மகள் தீபா இந்த சொத்தின் வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்த நிலையில், ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மற்றும் அரசின் முடிவை மாற்றி, நிலத்தை கையகப்படுத்தும் முடிவை கைவிட்டுவிட்டு வேதா நிலையம் சாவியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வேண்டும்  உத்தரவிட கோரி தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆனந்த வெங்கடேசன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது,  தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ஆஜரான வழக்கறிஞர், நிலம் கையகப்படுத்துவது நடைமுறையில் தான் இருக்கிறது, இன்னும் முடிவெடுக்கவில்லை. அது தொடர்பாக தீபா, தீபக்கிடமும் கருத்தை தெரிவிக்க நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வருமான வரித்துறை சார்பில், தங்களுக்கு பாக்கி இருப்பதால்- பாக்கி தொகையை செலுத்தாமல் இந்த இடத்தை தீபா, தீபக்கிடம் ஒப்படைக்க கூடாது என வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி ஆனந்த வெங்கடேசன், ஜெயலலிதா சொத்து தொடர்பாக தீபா, தீபக் வாரிசு என்று அறிவித்த நீதிபதி கிருபாகரன் அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேசன்  பரிந்துரை செய்துள்ளார்.

Categories

Tech |