Categories
தேசிய செய்திகள்

ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு… வெளியான அறிவிப்பு…!!!

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு மாணவர்களின் பயணத்தை குறைப்பதற்கு 600 ஆக இருந்த தேர்வு மையங்களின் எண்ணிக்கை 1500 ஆக உயர்த்தப்பட்டது மேலும் தேர்வு எழுத வரும் மாணவர்கள் புகைப்படங்களுடன் கூடிய ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து வர வேண்டும் எனவும் அறிவித்திருந்தது.

நடப்பு ஆண்டுக்கான ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு அக்டோபர் 3ம் தேதி நடைபெறும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.ஜேஇஇ தேர்வு கொரோனா சென்ற ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |