நடிகை மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் வரும் விஜய் கெட்டப்பில் இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதையடுத்து இவர் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார் . தற்போது இவர் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் D43 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
https://twitter.com/MasterOfficiaI/status/1407320172784885760
இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் வரும் ஜேடி கெட்டப்பில் ஸ்டைலாக நடந்து வரும் வீடியோ வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.