80’s 90’s கிட்ஸ்-களிடம் வெகுவாக கவர்ந்த ஒருதிரைப்படம் தான் ‘ஜேம்ஸ் பாண்ட். இந்த திரைபடத்தின் தூண்டுதலால் தான், தமிழில் அந்த காலத்தில் பெரும்பாலான CID சம்மந்தப்பட்ட படங்கள் எடுக்கப்பட்டது. ஜேம்ஸ்பாண்ட் திரைப்படம் என்றும் நிலைத்து நிற்க காரணம் அதன் தீம் மியூசிக் தான்.அந்த மியுசிக்கை இசையமைத்த இசையமைப்பாளர் மாண்டி நார்மன் நேற்று காலமானார்.
அவருக்கு வயது 94. கிழக்கு லண்டனை சேர்ந்த இவர்,
பல்வேறு ஹாலிவுட் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வயதுமுதிர்வு காரணமாக மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றிகாலமானார். இவரது மறைவிற்கு திரை உலகினர்,
ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.