நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கியை விண்வெளிக்கு அனுப்பி இருக்கிறது. இந்த தொலைநோக்கி விண்வெளியை துல்லியமாக புகைப்படம் எடுத்து அனுப்புகிறது. இந்த தொலைநோக்கி வெளியிடும் புகைப்படங்களால் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்நிலையில் பிக்பேங் எனப்படும் பெருவெடிப்பில் இருந்து பிரபஞ்சம் உருவானதாக விஞ்ஞானிகள் நம்பினாலும், பல்வேறு கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படி விலகாத மர்மங்களை கண்டுபிடிப்பதற்காகதான் நாசா நிறுவனம் சுமார் 80 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை உருவாக்கி விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்வெளியில் ஏவப்பட்டது. இந்த தொலைநோக்கியானது கேலக்ஸி மற்றும் பால்வழி மண்டலத்தை தெளிவாக புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்க்கும் போது கேலக்ஸியின் வடிவில் நட்சத்திரக் கூட்டம் இருப்பதும் தெரிய வருகிறது. இந்த தொலைநோக்கியானது அகச்சிவப்பு கதிர்கள் மூலம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இது அண்டை விண்மீன் கூட்டம் பற்றி ஆராய்ச்சிக்கு மிகவும் உதவுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் நட்சத்திரங்களின் வயது, அளவு மற்றும் அதில் அடங்கியுள்ள தூசுக்கள் பற்றிய விவரங்களை விஞ்ஞானிகளால் கண்டறிய முடியும். அதோடு விண்மீன் கூட்டங்களில் நட்சத்திர உருவாக்கம் எப்படி நடைபெறுகிறது என்பதையும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியும். மேலும் நாசா ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்களை இசை வடிவில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவானது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Hear that? 🎧
These soothing sounds depict the "Cosmic Cliffs" of the Carina Nebula. By translating data to sound, we can experience @NASAWebb's data in a new way. Also explore views of the Southern Ring Nebula and "hear" exoplanet WASP-96 b's atmosphere: https://t.co/wAk1eGKkpI pic.twitter.com/jkV0oDjFY9
— NASA (@NASA) August 31, 2022