Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஜோசியம் பார்க்க போனா இப்படி சொல்லிட்டாரு..! விவசாயி பரபரப்பு புகார்… 5 பேருக்கு வலைவீச்சு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் புதையல் எடுத்து தருவதாக கூறி விவசாயியிடம் மோசடி செய்த ஜோதிடரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரியபித்தன்பட்டியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு தொழிலில் ஒரு வருடத்திற்கு முன்பு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள கனியூர் பகுதியை சேர்ந்த ஜோதிடர் சசிகுமார் என்பவரிடம் ஜாதகம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதையடுத்து சிலருடன் ஜோதிடர் சசிகுமார் தங்கவேலின் வீட்டுக்கு வந்து பூஜை செய்துள்ளார். மேலும் தங்கவேலுக்கு சொந்தமான தோட்டத்தில் புதையல் இருப்பதாகவும், அதை தான் எடுத்து தருவதாகவும் கூறியுள்ளார்.

இதற்காக ரூ. 24 லட்சம், செல்போன், 44 பவுன் நகைகள், மோட்டார் சைக்கிள், கார் ஆகியவற்றை தங்கவேல் குடும்பத்தினரிடமிருந்து சசிகுமார் வாங்கியுள்ளார். ஆனால் புதையல் எதுவும் அவர் எடுத்துக் கொடுக்கவில்லை. இது பற்றி தங்கவேல், சசிகுமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பூஜை செய்து மறுநாள் புதையலை எடுத்துத் தருவதாக கூறியுள்ளார். அதன்படி தங்கவேல் வீட்டிற்கு மறுநாள் சசிகுமார் ஐந்து பேருடன் வந்தார்.

ஆனால் புதையல் எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கு மாறாக தங்கவேல் குடும்பத்தினரை மிரட்டி உள்ளார். இதையடுத்து தங்கவேல் உறவினர்களுடன் சென்று மோட்டார் சைக்கிள், கார், ரூ. 2 லட்சம், செல்போன் ஆகியவற்றை கேட்டபோது திருப்பி கொடுத்துள்ளார். ஆனால் 44 பவுன் நகை மற்றும் ரூ.20 லட்சம் ஆகியவற்றை அவர் கொடுக்கவில்லை. இது தொடர்பாக திண்டுக்கல் காவல் நிலையத்தில் சசிகுமார் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் சசிகுமார் மீது காவலத்துறையினர் வழக்குப்பதிந்து பின் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே ஜோதிடரின் கூட்டாளிகள் 5 பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |