கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் நிச்சயதார்த்த விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.
கௌதம் கார்த்திக், கார்த்திக்கின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் “கடல்” திரைப்படம் மூலமாக அறிமுகமானார் கௌதம் கார்த்திக். ஆனால் இத்திரைப்படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. இதையடுத்து பல படங்களில் நடித்து வந்த கௌதம் கார்த்திக்கிற்கு 2017 ஆம் வருடம் வெளி வந்த “ரங்கூன்” திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. பிறகு ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, இவன் தந்திரன் என பல வெற்றிப் படங்களைக் கொடுக்க ஆரம்பித்தார். தற்போது இவர் சிம்புவுடன் இணைந்து பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
கௌதம் கார்த்திக், “தேவராட்டம்” திரைப்படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த மஞ்சிமா மோகனை காதலிப்பதாக செய்தி வெளியானது. இவர்கள் இருவருக்கும் கூடிய விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் இது குறித்து மஞ்சிமா மோகன் விளக்கம் அளித்தில் கூறியுள்ளதாவது, முழுக்க வதந்தி என்றும் தன்னுடைய பெற்றோர் இந்த வதந்தியால் மிகவும் மனமடைந்திருப்பதாக கூறினார். இந்த நிலையில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சு மாமா முகநூல் உள்ளிட்டோரில் இருவரும் அண்மையில் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டுள்ளார்கள். அது கௌதம் கார்த்திக் நெருங்கிய நண்பர் கோபி என்பவரின் திருமணமாகும். இதில் இருவரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.