சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள உடன்பிறப்பே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் படங்களை தாயாரித்தும் வருகிறார். இதுவரை சூர்யா தயாரிப்பில் வெளியான 36 வயதினிலே, கடைக்குட்டி சிங்கம், சூரரைப்போற்று, பொன்மகள்வந்தாள் போன்ற பல படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகியிருந்தது.
Love makes a family bond stronger and we are inviting you to be a part of our family ❤️
Come, watch #UdanpirappeOnPrime Oct 14, @PrimeVideoIN @Suriya_offl #Jyotika @erasaravanan @SasikumarDir @thondankani @KalaiActor @immancomposer @sooriofficial @nivedhithaa_Sat #sijarose pic.twitter.com/IyvR4S37XM
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) September 30, 2021
தற்போது சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உடன்பிறப்பே திரைப்படம் உருவாகியுள்ளது. இரா.சரவணன் இயக்கியுள்ள இந்த படத்தில் சசிகுமார், சமுத்திரகனி, சூரி, கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படம் ஜோதிகாவின் 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உடன்பிறப்பே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி இந்த படம் நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீஸாக உள்ளது.