அரசு பள்ளி தலைமையாசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பெரியபாலம் அருகே ரவிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோட்டைமேடு பகுதியில் இருக்கும் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு நிவேதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு லோகித் என்ற மகனும், பார்கவி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான ரவிக்குமார் குடும்பத்தை சரியாக கவனிக்காமல் இருந்ததால் நிவேதா தனது கணவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் ஜோதிடம் பார்ப்பதற்காக நிவேதா வெளியே சென்ற நேரத்தில் ரவிக்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று ரவிக்குமாரின் உடலை கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக நிவேதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ரவிக்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரித்து வருகிறார்கள்.