Categories
ஆன்மிகம் கோவில்கள்

ஜோதி வடிவத்தில் காட்சி கொடுத்த ஐயப்பன்… சரண கோஷமிட்டு பக்தர்கள் தரிசனம்…!!!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா முழக்கமிட இன்று கோலாகலமாக நடந்து முடிந்தது.

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், மகர விளக்கு பூஜை கோலாகலமாக நடைபெற்றது. பொன்னம்பல மேட்டில் ஜோடி வடிவத்தில் காட்சி கொடுத்த ஐயப்பனை சாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷமிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் சுவாமி ஐயப்பன் காட்சி அளிப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். இதனை காண வழக்கமாக சபரிமலையில் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரள்வார்கள். ஆனால், கொரோனா முன்னெச்சரிக்கையாக தற்போது, நாள் ஒன்றிற்கு ஐயாயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என, திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

மேலும் மகர ஜோதிக்கு முன்னர் நடைபெறும் பேட்டை துள்ளல் மற்றும் திருவாபரண ஊர்வலத்தில், 50 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதைதொடர்ந்து 6.30 மணிக்கு திருவாபரணம் ஐயனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 6.40 மணிக்கு பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தரிசனம் நடைப்பெற்றது. பொன்னம்பலமேட்டில் 3 முறை தென்பட்ட மகரஜோதியை சரணகோஷம் முழங்க சபரிமலை ஐயப்பன் கோயில் இருந்து பக்தர்கள் தரிசித்தனர். ஜோதி வடிவத்தில் ஒளிர்ந்த ஐயப்பனை சாமியே சரணம் ஐயப்பா என்ற முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Categories

Tech |