Categories
உலக செய்திகள்

ஜோபைடனின் விமர்சனம்… “அவரது கருத்து ஆச்சரியமடைய வைத்தது”…? பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பேச்சு…!!!!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் நடைபெற்ற ஆளும் ஜனநாயக கட்சியின் பிரச்சார குழு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதில் பேசிய அவர் பாகிஸ்தான் உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்று ஏனென்றால் அந்த நாடு எந்தவிதமான ஒற்றுமையும் இல்லாமல் அணு ஆயுதங்களை கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பற்றி ஜோபைடனின் பேச்சு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில் ஜோபைடனின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் அரசு இது தொடர்பாக தலைநகர் இஸ்லாமிய மதத்தில் உள்ள பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரை நேரில் அழைத்து சம்மன் வழங்கியுள்ளது. மேலும் இது பற்றி பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி பேசும்போது, ஜோ பைடனின் கருத்து ஆச்சரியமடைய செய்திருக்கிறது மேலும் அவரது கருத்து ஈடுபாடு இல்லாத தவறான புரிதலால் உருவானது. இந்த விவகாரத்தில் அமெரிக்க தூதரை நேரில் சந்தித்து சம்மன் அனுப்பி உள்ளது. இருப்பினும் இது அமெரிக்காவுடனான பாகிஸ்தான் உறவை பாதிக்கும் என நான் கூறவில்லை என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |