ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் தங்கம் வாங்குவதற்கான சிறப்பு சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் புகழ்பெற்ற ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் இன்கிரிடிபிள்ஸ் 50 என்ற சிறப்பு சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின்படி தங்கம், வெள்ளி மற்றும் இதர நகைகளுக்கு 50% தள்ளுபடி கிடைக்கிறது. இந்த திட்டத்தில் சேரும் வாடிக்கையாளர்களுக்கு ஓராண்டு வரை காப்பீடு திட்டம் மற்றும் வாழ்நாள் முழுவதும் இலவச பராமரிப்பு சேவைகள் மற்றும் தங்கம் எக்சேஞ்ச் போன்ற சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அதிகமான வாடிக்கையாளர்கள் சேர்ந்து பயன் அடைந்துள்ளனர். மேலும் மக்களிடையே இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதால் ஜோய் அலுக்காஸ் நிறுவனத்தின் தலைவர் இந்த சலுகையை மார்ச் 27-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.